எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளதற்கு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் காரணம் என வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசிய தேவைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தான் சட்டப் பாதுகாப்பு கொடுத்து, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை காப்பாற்றினார் என்றும் தெரிவித்தார். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார்.